பள்ளி விட்டு வீடு திரும்பும் போதும் சரி ..
பள்ளி விடுமறை நாட்களிலும் சரி ...
எங்கள் வீட்டின் எதிரே உள்ள அந்த சிறிய பெட்டி கடையில் இருக்கும் தேன்மிட்டாய்க்கு நான் அடிமை ..
இன்று காணமல் போன ஐந்து பைசா, பத்து பைசா , இருபது பைசாவிற்கு அன்று மிகப்பெரும் கீராயக்கி,ஐந்து பைசாவிற்கு சிறிய தேன்மிட்டாய் , இருபது பைசாவிற்கு பெரிய தேன்மிட்டாய் என்று இரண்டு வகை தேன்மிட்டாய்கள் வேறு.. அந்த தேன்மிட்டாயில் என்ன என்ன கலந்து இருக்கிறதோ.. இந்த பையனுக்கு ஏன் தான் இத்தனை பைத்தியமோ தெரியவில்லை, அங்கலாயித்து போவாள் அன்னை , அத்தையோ வரும்போதெல்லாம் என் கையில் இரண்டு ரூபாயை திணித்து உனக்கு வேண்டும் என்கிறதை வாங்கி தின்னு என்று லஞ்சமாய் அம்மாவிற்கு தெரியாமல் பாசத்தை பொழிவாள், பாட்டியோ தேன்மிட்டாய் அதிகமாய் தின்றால் உட்காரும் இடத்தில் எறும்பு கடிக்கும் என்று பயமுறுத்துவாள் , சித்தியோ வாங்கி கொடுக்க மனம் இருந்தும் கூட்டாய் இருக்கும் குடும்பத்தில் யாரிடமும் வாங்கி கட்டிக்கொள்ள விளையாமல் அமைதியாய் இருப்பாள் , இருந்தாலும் எனக்கோ அந்த தேன்மிட்டாயின் மீது இருந்த ஈர்ப்பு குறைந்த பாடில்லை, மழை அடித்தாலும் புயல் வீசினாலும் நாள் ஒன்றிற்கு ஒரு மிட்டாய் சாப்பிடாமல் இருந்ததில்லை, யார் மீது கோபம் இருந்தாலும் உண்ணும் உணவை விடுவேனே அன்றி தேன்மிட்டாயை அல்ல ... அந்த தெருவில் இருந்து வேறு வீட்டிற்கு குடியேறினோம் .. அங்கு தேன்மிட்டாய் கடையை போன்று பெட்டிக்கடைகள் அவ்வளவாக இல்லை ... மேலும் தேன்மிட்டாய் பெற்று தர யாரும் முன் வரவில்லை .. நாட்கள் கடந்தோடின ... காலத்தின் கோலத்தில் தேன்மிட்டாயையும் அந்த சிறிய பெட்டி கடையையும் அங்கு இருக்கும் பெரியவரையும் மறந்து தான் போனேன் ... பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் அந்த பழைய தெருவிற்கு அந்த தேன்மிட்டாய் விற்கும் பெட்டி கடையை தேடி சென்றேன்.. இன்றோ ஐந்து , பத்து , இருபது பைசாக்கள் புழக்கத்தில் இல்லை .. கண்டிப்பாக என் தேனமிட்டாயின் விலையும் உயர்ந்திருக்கும் என்று ஐம்பது பைசா அளவில் இருக்கும் சிறிய ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்துக்கொண்டு சென்றேன் ... தெருவே மாறி இருந்தது.. அந்த பெட்டிக்கடை இருந்த இடத்தில் யாரோ ஒருவர் பெரிய வீடு ஒன்று கட்டி இருந்தார்....இன்று அங்கு அவ்வளவாக ஓட்டு வீடுகளும், வீட்டை ஒன்றிய பெட்டி கடைகளும் , அங்கு வித விதமான பிளாஸ்டிக் பைகளில் தொங்கி கொண்டிருக்கும் தேன்மிட்டாயிகளும், அதற்கு கூடி நிற்கும் சிறுவர்களும் , அந்த தேன்மிட்டாய்கள் விற்ற விலைகளும் காணமல் போயிருந்தது .. அன்று நாணயமானவர்களும் புழக்கத்தில் இருந்த நாணயங்களுக்கும் மதிப்பு இருந்தது .. இன்றோ எதற்கும் மதிப்பு இல்லை .. நாணயமான அவைகளும் புழக்கத்தில் இல்லை , வேலை நிமித்தமாக வெளிநாடு சென்றபொழுது அங்கு புழக்கத்தில் இருந்த ஐந்து செண்டுகளை (பைசாக்கள்) பார்க்கையில், அங்கும் தேடினேன் .. அந்த ஐந்து செண்டுகளுக்குகாவது என் தேன்மிட்டாய் கிடைக்குமா என்று.........

தேன்மிட்டாய் மட்டுமா?? புளிப்பு மிட்டாய், பாக்கு மிட்டாய், சூட மிட்டாய், காரம், 1 ரூபா சோமாஸ், மாங்கா இப்படி எக்கச்சக்கமா காணாம போயிருக்கு....
ReplyDeleteநல்லா இருக்கு கார்த்தி. வெளிநாட்டுலேயும் தேடினேன்னு முடிச்சது சூப்பர்
ReplyDelete