Wednesday, December 29, 2010

எனவளின் கனவினில்

ஒவ்வொரு வினாடியாக
கரைந்து கொண்டிருந்தது
இரவு பெய்த
பனியின் குளுமை
விடியலில்
என் நினைவுகளும்
கரைந்து கொண்டிருந்தது
காதலில்
எனவளின் கனவினில்...

Friday, September 10, 2010

நேற்று...இன்று...

உன் கண்ணில் இருந்து

விழும் நீரின் கரிப்பு கூட

கனிந்து போனதடி

நீ உதிர்த்த புன்சிரிப்பில்

நேற்று

கரிந்து தான் போனதடி

என் உள்ளம்

உன் நினைவுகள்

என்னை சுட்டபொழுது

இன்று

பாரம்

நிழலைக் கூட

நிலத்தில் விழாமல்

தாங்கி நின்றேன்

உன்னை

உடைந்து தான் போனேன்

பாரம் தலைக்கேறியதல்

Friday, September 3, 2010

காதல்

அ அம்மா என்று

சொல்லப் பழகினேன்

அ அப்பா என்று

எழுதப் பழகினேன்

எதைப் பழகியபோதும்

பெற்றவர்களை நினைத்த

என்னை

கவிதை படைக்க வைத்தாய்

உன்னை நினைத்து

நட்பு

சுற்றத்தின் சொற்களால்

துளைக்கப்பட்ட என்னை

தொலைத்து எடுத்தேன்

நட்பு என்னும் அருவியில்

நனைந்த பொழுது

Saturday, July 31, 2010

நோக்கம்...

கம்பனின் காவியத்தில்
அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
நோக்கும் நோக்கம்
வேறாயின்
ராமனும் ஆவானே
ராவணனே...

Friday, July 30, 2010

செல்வது எங்கே ???

எங்கு செல்கிறது
இந்த சுதந்திர தேசம்
நாட்டின் குடிமகனுக்கு
சத்தான உணவு கிடைக்க
சுத்தமான குடிநீர் கிடைக்க
அடிப்படை கல்வி கிடைக்க
பாதுகாப்பான இருப்பிடம் கிடைக்க
மானம் காக்கும் ஆடை கிடைக்க
புதிய வாழ்க்கை கிடைக்க
வழி செய்யாம்மல்
இந்த சுதந்திர தேசம்
செல்வது எங்கே ???

Wednesday, July 28, 2010

விழி

ஆயிரம் எண்ணங்கள் மனதில்

அலையாய் அடித்தாலும்

அவை ஆயிரமாயிரம் துளிகளாய்

சிதறி தெறித்தாலும்

அனைத்தும் உன் கயல் விழி

கண்டவுடன் காணமல் போகின்றன

என்னைப் போல்....

கேள்வி - பதில்

கேள்வியை மட்டும் கேட்டிருந்தால்

பல பதில்களை பெற்றிருப்பேன்

அக்கேள்வியின் விடை புரியாமல்

அதனால்

பதிலையும் அறிந்து கொண்டேன்

பலரும் என் கேள்வியை திரும்பக் கேட்பதால்...

பிழை

கண்களை அகல விரித்து
மெல்லிய நாவினை பற்களால் கடித்து
உன் அழகிய கை விரல்களால்
குட்டு பெறும்போதுதான்
புரிகின்றது
என் பிழை
எவ்வளவு அழகானதென்று...

Tuesday, July 27, 2010

மெட்டி...

வார்த்தையால் பேசிய காலம் போய்,

கண்களால் பேசினோம்.

இன்று உன் கண்ணை காணும் வீரமற்று

உன் கால்களைப் பார்க்கிறேன்,

கண்ணீர் வடிக்கிறேன்,

உன் சிறு விரலை அலங்கரிக்கும் மெட்டியைப் பார்த்து...

உன்னை பற்றி...

என் விழித்திரையில் உன்னை பிரவேசித்த பின்னும்

ஏனோ என் மனதில் வாசம் செய்ய மறுக்கிறாய்

ஏன் என் மனதினை நீ அறிய மறுக்கிறாயா

அல்ல அறிந்தும் அதை மறைக்கிறாயா

புரியாமல் நிற்கிறேன்

விழி மூடி யோசிக்கிறேன்

உன்னை பற்றி …

Tuesday, July 20, 2010

கழிந்த உறவு....

ஒரே இடத்தில் பயின்று கழித்தோம்
ஒரே இடத்தில் உண்டு கழித்தோம்
ஒரே இடத்தில் உறங்கி கழித்தோம்
ஒரே இடத்தில் ஆடி கழித்தோம்
அனைத்தையும் ஒன்றாய் கழித்த நம்மை
காலம் கழித்து விட்டது பல்வேறு பெயரால்……

கண்ணால் கண்ட தேவதை….

கண்ணால் கண்ட தேவதையே
என் கண்ணு முன்னாடி உன்னை காணலியே
காதலென்னும் வார்த்தையை நான் சொல்ல
என்ன பிடிக்காம நீ விலகியதேன் ???

தேனா பேசிய வார்த்தையெல்லாம்
இன்று தேளா வந்து கொட்டியதே
பூ வால் அடிச்ச கண்ணிரண்டும்
இன்று அனலை வாரி எரிகிறதே...

வெறுப்பாய் என் மேல் நீ இருந்தாலும்
என் மனசை யாருக்கும் கொடுக்கலியே
தனியாய் வாழ்கை நகர்ந்தாலும்
என் தனிமை என்னை வாட்டலியே...

என்னை நீங்கி நீ போனாலும்
உன் நினைவுகள் இன்னும் விலகலியே
நீ என்னை மறந்தாலும்
நான் இன்னும் உன்னை மறக்கலியே....

காதல்...

காற்றை சுவாசிப்பது நின்றால்
உயிரே இல்லை என்றார்கள்
அவர்களுக்கு தெரிய வில்லை
நாம் சுவாசிப்பது காற்றை அல்ல
நம் காதலை என்று...